இதெல்லாம் சாத்தியமாவென யோசித்துக் கிடக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக வேலை மெனக்கெட்டு நாம் ஆரம்பித்த பணியை வெற்றிகரமாக முடிந்தபின் அதற்கு உலகம் தரும் வரவேற்பு அந்த சுமையையெல்லாம் இலகுவான சுகமாக்கிவிடும். புகழ்மிக்க ஆயிரம் பக்க அபூர்வ அரபிக் நாவல் ஒன்றை தமிழ்படுத்த மெனக்கெடுவது போன்றது அப்பணி. கூகிள் மேப்பில் காணப்படும் ஸ்டிரீட் வியூ வசதியைக் கொண்டுவர தெருதெருவாகப் போய் வேலைமெனக்கெட்டு வீடியோபிடித்து கணிணியில் ஏற்றினார்களாம். இறுதியில் நல்ல வரவேற்பு. இது போல இன்னொரு கும்பலும் தெரு தெருவாக ஆட்களை அனுப்பியிருக்கின்றார்கள். ஆனால் இன்னொரு வேலை விஷயமாக.
ஒரு பொருளின் இருப்பிடத்தை கண்டறிய சேட்டலைட் வழியாலான ஜிபிஎஸ் (GPS) நுட்பங்கள் பிரபலமாயினும் அதின்மீதுள்ள நம்பிக்கை வல்லரசுகளுக்கே திகிலைத்தந்துள்ளன. உள்ள 24 சேட்டலைட் கும்பலில் ஒன்று செயலிழந்தாலும் நம் ஜிபிஎஸ் கருவிகள் சுணங்கிவிடுமாம். சியாட்டிலின் வானுயர் டவுண்டவுன் கட்டிடங்களினூடே கார் புகுந்ததும் இந்த ஜிபிஎஸ் கருவிகளால் சேட்டலைட்டை தொடர்புகொள்ள இயலாமல் போவதால் அவை கப்சிப்பாகின. இறைவனை வேண்டத்தொடங்குவோம்.
சேட்டலைட் நுட்பத்தை பயன்படுத்தாமல் அருகே இருக்கும் செல்போன் டவர்களை தொடர்புகொண்டு அது வழியாக நம் இருப்பிடத்தை கண்டறிவது இன்னொரு வழி. பேருந்தில் பயணிக்கும் போது நாம் ஊர்களைத் தாண்டிச் செல்லும்போது உங்கள் போனிலும் டவர் ஊர் பணகுடியிலிருந்து வள்ளியூருக்கு மாறுவதை கவனித்திருப்பீர்கள். ஆனாலும் ஒரு சின்னப் பிரச்சனை. அதுவால் வள்ளியூரில் நீங்கள் எந்த டீக்கடை முன்னால் டேராபோட்டுள்ளீர்கள் என மிகச்சரியாக சொல்ல முடியாது.
Wi-fi நான் எதிர்பார்த்த அளவுக்கு நம் ஊரில் புழக்கத்தில் இல்லை. குறுகிய டூரில் போன இடமெங்கும் ஒரு Wi-fi கூட கண்ணில் அகப்படாதது என் துரதிஷ்டமாகக் கூடயிருக்கலாம். இங்கே தெருவில் எங்கு போயினும் Wi-fiகள். பெரும்பாலும் Secured தான். இந்த Wi-fiகளை வைத்தே நாம் இருக்கும் இடத்தை அடையாளம் காணலாமென ஒரு கும்பலுக்கு தோண தெருத் தெருவாகப் போய் எந்த தெருவில் எந்தெந்த Wi-fi-க்கள் உள்ளன என குறிப்பெடுத்து ஒரு பெரிய டேட்டாபேசையே உருவாக்கியுள்ளனர் Skyhook காரர்கள். உலகமெங்கும் மொத்தம் பத்து லட்சம் Wi-fi களை குறித்து வைத்திருக்கின்றார்கள். உங்கள் இருப்பிடத்தை ஒருவர் கண்டறிய சேட்டலைட்டெல்லாம் போகவேண்டாம். பக்கத்தில் ஒரு Wi-fi இருந்தாலே போதும். Wi-Fi Positioning System (WPS) எனப்படும் இந்த நுட்பம் வழி இயங்கும் http://loki.com-ல் என் இருப்பிடத்தை கேட்டுப்பார்த்தேன் இரு நொடிகளில் மிகச் சரியாகச் சொன்னது. வழக்கமான என் GPS-சோ "Waiting for accuracy" - என சொல்லிக்கொண்டே இரு நிமிடம் எடுக்கும். அதுபோல துல்லியமும் மாறுபடுகின்றது. மேலே இடது படம்-WPS உதவி இல்லாமல் அவ்வளவு துல்லியமாக இல்லை, வலது படம்-WPS உதவியுடன் மிக துல்லியமாக இருக்கின்றது. இந்த மாதிரியான location aware பயன்பாடுகளால் நமக்கு நன்மைகள் என்னவாம்? உங்கள் இருப்பிடத்துக்கு மிக அருகிலுள்ள ஜெராக்ஸ் கடையை அல்லது மருந்து கடை எதுவென ஒரே சொடுக்கில் தெரிந்து கொள்ளலாம்.ஐகான் பட கோப்புகள் சிலசமயங்களில் தனியான .ico கோப்பாக வராமல் .exe அல்லது .dll கோப்புகளுக்குள் புதைந்து இரண்டற கலந்து ஒன்றாக வரும். இதுபோன்ற சமயங்களில் ஐகான் அல்லது .ico பட கோப்புகளை தனியாக பிரித்தெடுக்க icofx அல்லது GetIcons மென்பொருட்களை பயன்படுத்தலாம். சுட நல்ல டூல்.
Wednesday, September 2, 2009
GPS-ம் WPS-ம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment