Wednesday, September 2, 2009

பீச்சு வாக்கில்

கை நிறைய பணம் இருக்கும் ஆனால் பொருட்கள் எதுவும் வாங்க முடியாது. அவ்வளவு விலை அதிகமாயிருக்கும்.இது இன்பிளேசன்.தமிழில் பணவீக்கம் என்பார்கள். இன்றைய ஜிம்பாவேயின் நிலை இதுதான்.

கடை நிறைய விலை மலிவாக பொருட்கள் இருக்கும் ஆனால் அதை வாங்க கையில் பணம் இருக்காது.இது டீபிளேசன். அமெரிக்காவின் இன்றைய நிலை இதுதான். மின்னணு பொருட்களின் விலைகள் கன்னாபின்னாவென குறைந்திருக்கின்றன. வீடுகள் விலையும் தான்.ஆனால் மக்களிடையேயோ வாங்கும் திறன் இல்லை அல்லது பயந்து போய் வாங்க மறுக்கின்றார்கள். முன்னைய பண வீக்கத்தை அப்படியும் இப்படியுமாய் கட்டுப்படுத்தி விடலாமாம். டீபிளேசனை எப்படி கட்டுபடுத்துவது.ரொம்ப கஷ்டமாம்.

உலக பெருசுகள் எல்லாம் ஒன்று கூடி இதற்கொரு தீர்வு காண பேசும் போது ஒரு குளோபல் டீல் கொண்டுவர வேண்டும் என்றார்கள்.சிக்கல்கள் தான் அநேக வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. அதனால் இதுபோன்ற தருணங்களை இழந்துவிடக்கூடாது. உலக மக்கள் ஒன்றிணைய வேண்டும் சர்வதேச அளவில் ஒரு தீர்வு காணவேண்டும் New World Order என்றெல்லாம் வாய்கிழிய பேசுகின்றார்கள். வீட்டுக்கு வந்ததும் “Be Indian Buy Indian" மாதிரி "American products are our first choice" கணக்காலான சுதேசித்துவம் அல்லது protectionism பேசுகின்றார்கள். இரண்டில் எது வெல்லப்போகின்றதோ தெரியவில்லை. இன்று சுதேசித்துவம் முன்னணியில் இருப்பது போல் தெரிந்தாலும் போகப் போக NWO-தான் வெல்லும் என்பது என் கணக்கு.

இங்கே பெஞ்சில் இருக்கும் H1B-காரர்கள் விடுமுறைக்காக விஷேசத்துக்காக இந்தியா செல்லுமுன் கொஞ்சம் யோசிப்பது நல்லது. பெஞ்சில் இருக்கும் H1B-காரர்கள் விடுமுறை முடிந்து அமெரிக்கா திரும்பும் போது விமானமுனையத்திலேயே அடையாளம் காணப்பட்டு உங்கள் சேவை இப்போதைக்கு எங்களுக்கு தேவை இல்லையென சொல்லப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதாக கேள்விப்பட்டேன். புதிதாக H1B விண்ணப்பிப்பவர்களுக்கும் நிறைய கெடுபிடிகளாம். கிளையண்ட் லெட்டர் வரைக்கும் கேட்கின்றார்களாம். இங்கேயே இத்தனை மில்லியன்பேர் வேலை இல்லாமல் இருக்கின்றார்களே அவர்களில் உங்களுக்கு யாரும் கிடைக்க வில்லையாவென நிறுவனங்களை கேட்கின்றார்கள். எல்லாம் பேச்சு வாக்கில் Beach Walk-ல் கேள்விப்பட்டவை. உறுதிப்பட சொல்ல மூலம் எதுவும் இல்லை.

மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஊர் வருகின்றேன்.Little excited. ஏழு ஆண்டுகளுக்குப் பின் சென்னை வருகின்றேன். உஸ்மான் ரோட்டில் மேம்பாலமெல்லாம் போட்டிருப்பதாகச் சொன்னான். மாமாக்களுக்கு டிமிக்கி கொடுத்து பைக் ஓட்டிப் பழகிய இடம் அது.ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் பங்களூரும் போகலாமென உத்தேசம்.எல்லாம் புது உலகமாயிருக்கும். ஊரிலிருந்து சென்னைபோக ரயில் டிக்கட் முன் பதிவு செய்ய http://www.irctc.co.in சென்றால் சர்வதேச கடனட்டையை ஏற்றுக்கொள்ள மாட்டோமென்று விட்டார்கள். http://www.cleartrip.com உதவும் என்றான் கோபால்.தங்குவதற்கு நல்ல ஹோட்டலொன்றை கண்டுபிடிக்க வேண்டும். போகுமிடமெல்லாம் இணையம் கிடைக்குமாவென தெரியவில்லை. தேர்தல் நெருங்குவதால் மின்சார குறைச்சல் இருக்காதுவென நம்பிக்கை.

மது வலைப்பதிவின் ஐந்து ஆண்டுகள் நிறைவையொட்டி வாழ்த்துக்கள் கூறிய பத்தாம் வகுப்பு மாணவி திவ்யா முதல் 70 வயது பெரியவர் சுந்தர் வரைக்குமான அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல.

1 comment: