
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

ஓடுகின்ற கால்கள்
ஓய்வெடுக்கும் போது
நீ எடுத்துக்கொண்ட பயணம்
முடிந்திருக்க வேண்டும்!
வாழ்ந்த நாட்களை
திரும்பிப் பார்க்கும் போது
உன் பெயரை சிலர்
உச்சரிக்க வேண்டும்!
கோபுரங்களின் அழகை
அஸ்திவாரங்கள் தாங்குவது போல்
நீ பிறந்ததின் பயனை
ஊரறியச் செய்
- யாரோ

சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,
தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்,
சொந்தத்தை நம்பி நீ இருக்காதே,
பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.

மனிதன்
உணவின்றி 40 நாட்களும்
நீரின்றி 3 நாட்களும்
காற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம்.
ஆனால் நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது.

அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
கடல் கடந்து கரையேறலாம்
நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்
- மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
- மிக மிக நல்ல நாள் - இன்று
- மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
- மிகவும் வேண்டியது - பணிவு
- மிகவும் வேண்டாதது - வெறுப்பு
- மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
- மிகக் கொடிய நோய் - பேராசை
- மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
- கீழ்த்தரமான விடயம் - பொறாமை
- நம்பக் கூடாதது - வதந்தி
- ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
- செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
- செய்யக் கூடியது - உதவி
- விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
- உயர்வுக்கு வழி - உழைப்பு
- நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
- பிரியக் கூடாதது - நட்பு
- மறக்கக் கூடாதது - நன்றி

ஆனாலும்....
பூக்கள் மலரும்
எட்டாதவை

திடம் திண்மம் வாயு இந்த மூன்று நிலைகளில் ஒன்றில் தான் பொருட்கள் இருக்கமுடியும் என பள்ளியில் சொல்லித் தந்தார்கள்.
நெருப்பு அது திடமா? திண்மமா? வாயுவா?
சூரியன் அதன் ஸ்டேட் என்ன? திடமா? திண்மமா? வாயுவா?
ஒளி அது துகளா இல்லை அலையா? இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
மூன்று தன்மைகளும் சேர்ந்தாப்போல் பிளாஸ்மாவென நான்காவதாக ஒரு நிலை இருக்கலாமென சொல்லிவைத்திருக்கின்றார்கள்.
நம் சரீரம் திடம், நம் இரத்தம் திரவம், நாம் சுவாசிக்கும் ஆவி வாயு, நம் ஆன்மா பயோபிளாஸ்மாவோவென ஒரு தற்காலிக முடிவு.
பொருளுலகில் உள்ளவை நம் புலன்களுக்கும் கருவிகளுக்கும் கட்டுபடும். பொருள்களுக்கு அப்பாற்பட்டவை எப்படி நம் கருவிகளுக்கோ கண்களுக்கோ கட்டுபடும்? அப்படி கட்டுபட்டால் அது பொருள் என்றாகிவிடுமே. எனவே நாம் எப்போது அந்நிலை அடைகின்றோமோ அப்போதுதான் பொருள்களுக்கு அப்பாற்பட்டவற்றை உணரமுடியும் எனலாமா?
Channel 4 - Dispatches (June 2009) - Terror in Mumbai எனும் ஒரு டாக்குமெண்டரி வீடியோவை சமீபத்தில் காண நேரிட்டது. அதிர்ச்சியிலிருந்து மீள ரொம்ப சமயம் பிடித்தது.
http://www.vimeo.com/5409826
சேகுவேரா

மனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால் எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு அவன் துயரத்தையும் அனுபவிப்பான்.
- ஹோம்ஸ்.
No comments:
Post a Comment