Thursday, October 8, 2009

மிஸ்ஸாகும் மூக்கு

இந்த இருபதாம் நூற்றாண்டில் நம் உள்ளங்கைகளில் தவழ்ந்து விளையாடும் கியூட் லிட்டில் செல்ல டாய்கள் தான் ஐபோன், பிளாக்பெர்ரி, நோக்கியா N95 முதலான ஸ்மார்ட் போன்கள்.

இந்த ஸ்மார்ட்போன்களின் உள்ளே நுழைந்து பார்த்தால் தெரியும் நாம் நினைத்துக்கூட பார்க்க இயலா அளவு இத்துணூண்டு சதுர அங்குலத்துக்குள் எத்தனை கோடி சமாசாரங்களை வைத்து வைத்திருக்கிறான் மனிதன் என்று. அதெப்படிடா நம்ம போன் சும்மா அதிருது...கால் வந்தா சும்மா வைப்ரேட் ஆகுதே அதெப்படிடானு கேட்டுத் தொலைத்தான் கோபால். கப்பாசிட்டர், ரெசிஸ்டர், டயோடு, டிரான்சிஸ்டர் மாதிரி இதற்கும் எதாவது வைப்ரேட்டர் சிப் கண்டுபிடித்து விட்டார்களோவென்பது அவன் யூகம். கொஞ்சம் குறைய அவன் சொன்னது சரிதான். சிப் எதுவுமில்லை. மைக்ரோசைசில் ஒரு எந்திர மோட்டார் உங்கள் போனில் இருக்குமாம். வாசிங்மெசின் வேகமாக சுத்தும்போது அது ”ஒரு மாதிரியா” அதிரும் பாருங்கள் அதே நுட்பம்தான் இங்கேயும். வேறே சிப்பெல்லாம் ஒன்றும் இல்லை.

போனை நீங்கள் குறுக்காக பிடித்தால் திரையை உங்களுக்கு குறுக்காகக் காட்டவும் நெடுக்காக போனை பிடித்தால் திரையை உங்களுக்கு நெடுக்காகக் காட்டவும் Accelerometer என்ற ஒரு சிலிக்கான் சில்லுவை பயன்படுத்துகின்றார்கள். சத்தியமா அது புவியீர்ப்புவிசையை வைத்து பொசிசனை கண்டுபிடிப்பதில்லையாம். பின்னே எப்படி கண்டுபிடிக்குதாம்?
தலைசுற்றுகின்றது.

எல்லா ஸ்மார்ட் போன்களிலும் நம் குரல்கள் அனலாக் தொழில்நுட்பத்தில் கடத்தப்படுவதால் ஒரு Baseband Processor-ம் பிற டிஜிட்டல் மென்பொருள் பயன்பாடுகளை ஓட்ட ஒரு Application Processor-ம் என இரு புராசசர்கள் இருக்கும். நோக்கியா போன்களில் பொதுவாக Texas Instruments புராசசர்களையும், பிளாக்பெர்ரிகளில் Qualcomm புராசசர்களையும், ஐபோன்களில் Samsung மற்றும் Infineon புராசசர்களை காணலாம்.

நமது கோப்புகளை சேமித்துவைக்க ஸ்மார்ட்போன்களின் உள்ளே ஹார்ட் டிஸ்கெல்லாம் கிடையாது. எல்லாம் Gig கணக்கில் NAND Flash DRAM-கள் தான். ஐபோனுக்கு Toshiba-வும்,பிளாக்பெர்ரிக்கும் நோக்கியாவுக்கும் Samsung-கும் இந்த DRAM-களை வழங்குகின்றார்கள். எல்லாம் சிலிக்கான் சில்லுகள் தாம்.

இது தவிர
புவியில் நாம் இருக்கும் இடம் தெரிய GPS,
திசைமாறிப்போனவனுக்கு திசை காட்ட Compus,
வீட்டு அல்லது அலுவலக இணையத்தோடு இணைய Wi-Fi,
பக்கத்து போனோடு இணைந்து MP3க்களை கடத்த Bluetooth மற்றும் Infrared
வேகமாய் திரையில் படம் ஓட, வீடியோ கேம் விளையாட Graphics Processor,
நம்மை நாமே படம் பிடித்துக்கொள்ள Camera ,
எக்ஸ்ரா ஸ்டோரேஜ்க்கு MicroSD Interface,
எப்.எம் பாட்டு கேட்க FM Radio Tuner,
நாம பேசுவதை Dual-band அல்லது Quad-band ஆக கடத்த RF Transceiver.

இப்படி இந்த ஐம்புலண்களில் மெய்(Touch Screen), வாய்(Speaker), கண்(Camera), செவி(Microphone) எல்லாம் சிலிக்கான் சிப் வடிவில் உள்ளே அந்த சிறிய பொட்டிக்குள்.
சிலிக்கான் என்றால் மண் என்று உங்களுக்கேத் தெரியும். எல்லாம் மண். ஆனால் உள்ளே தான் எத்தனை இண்டலிஜென்ஸ் நடக்கின்றது.
மனிதனும் மண் தான். அதே இண்டலிஜென்ஸ்.
இந்த வரிசையில் ஒரே வித்தியாசம் ஸ்மார்ட்போனில் மிஸ்ஸாகுவது மூக்கு.

No comments:

Post a Comment